நந்தகோபன் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வானது அக் கழகத்தின் தலைவர் தே. பவித்திரன் தலைமையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு நந்தகோபன் விளையாட்டு கழக மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 22 கழகங்கள் பங்குபற்றிய குறித்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டிக்கு குருக்கள் மடம் ஏசியன்ஸ் மற்றும் மட்டக்களப்பு வெற்றிகிங்ஸ் அணிகள் போட்டியிட்டிருந்த நிலையில் குருக்கள்மடம் ஏசியன் அணி 01ம் இடத்தினையும் மட்டக்களப்பு வெற்றிகிங்ஸ் அணி 02ம் இடத்தினையையும் பெற்றுக் கொண்டன.

இதன் போது 01ம் இடத்தைப் பெற்றுக்கொண்ட ஏசியன் அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசில்களும், வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டதோடு, 2ம் இடத்தைப் பெற்ற வெற்றிகிங்ஸ் அணிக்கு 15,000 ரூபாய் பண பரிசீல்களும் வெற்றிக் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பேத்தாழை இளந்தளிர் விளையாட்டுக் கழக தலைவர் நிமல்ராஜ், கிறவுண் விளையாட்டுக்கழக தலைவர் மோகன்ராஜ், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கங்கேசன் உட்பட கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ