வந்தாறுமூலை விஷ்னு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 2024.

மட்டக்களப்பு கல்குடா வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் "ஓடி விளையாடு" எனும் தொனிப்பொருளிலான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வித்தியாலய அதிபர் கி. சிவலிங்கராஜா தலைமையில் டைமன் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்ததோடு, வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசீல்கள் போன்றவற்றை வழங்கி கௌரவித்திருந்தார்.

இதன்போது ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளோடு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து அணிநடை, வினோத உடை, ஓட்டப்போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றிருந்ததோடு, பழைய மாணவர்களுக்கான அஞ்சலோட்ட போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்தோடு பச்சை நிறத்திலான வள்ளுவர் இல்லம், சிவப்பு நிறத்திலான இளங்கோ இல்லம், நீல நிறத்திலான பாரதி இல்லம் என இல்லங்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில் இல்ல வடிவமைப்பிலும் ஏனைய போட்டிகளிலும் வள்ளுவர் இல்லம் 01ம் இடத்தினையும் இளங்கோ மற்றும் பாரதி இல்லங்கள் முறையே 2ம்,3ம் இடங்களையும் பெற்றுக் கொண்டிருந்தன.

இந் நிகழ்வில் கல்குடா வலையக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பிரதிக் கல்வி பணிப்பாளர் திரு த. இதயகுமார், தாபனம் மற்றும் பொதுமுகாமைத்துவ பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு சீ. தயாசீலன், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திரு த. ரமேஸ், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி சு. சிவனேசராசா தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராசா மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ