ஈஸ்டர் படுகொலை 5ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21, 2019 ஈஸ்டர் ஞாயிறன்று கடும்போக்கு மதவாத பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட கொடூர குண்டு தாக்குதலின் போது உயிர் நீத்த உறவுகளின் 5ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு எமது கட்சியின் கிறிஸ்த மத விவகார இணைப்பாளர் மரியநேசன் திவாகரன் தலைமையில் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மனிதகுலத்தை பாவத்தில் இருந்து மீட்க்க உயிரைகொடுத்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில், இலங்கையின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு சோகத்தை உருவாக்கியுள்ள அந் நாளில் உயிரிழந்த எம் உறவுகளை நினைவு கூர்ந்து இன்று இந் நினைவு அஞ்சலி இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் எமது கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஆபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ. சிவனேசத்துரை சந்திரகாந்தன், கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கௌரவ. பூ.பிரசாந்தன், கல்வி கலை கலாச்சார செயலாளர் மணிசேகரன் உட்பட தலைவர் பணிக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் நான் உட்பட, கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கௌரவ. பூ.பிரசாந்தன், கல்வி கலை கலாச்சார செயலாளர் மணிசேகரன் உட்பட தலைவர் பணிக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ