மில்லர் மற்றும் பாரதி விளையாட்டு கழகங்களின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா!

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக கிண்ணையடி மில்லர் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழாவானது கழகத்தின் தலைவர் திரு வி. தரணிதரன் தலைமையில் மில்லர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோன்று சுங்கான்கேணி பாரதி விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழாவானது அக் கழகத்தின் தலைவர் ந.தவனேஸ்வரன் தலைமையில் பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வுகளில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசீல்கள் மற்றும் வெற்றிக்கேடயங்களை வழங்கி வைத்திருந்தார்.

இந் நிகழ்வில் தமிழர் கலாசாரத்தையும் பாரம்பரியத்தினையும் பிரதிபலிக்கதக்க வகையில் சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், கிடுகு பின்னுதல், 400M ஓட்டம், மை முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், கயிறு இழுத்தல், தலையணைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல், நீர் நிரப்புதல், மா மாற்றுதல், முட்டை மாற்றுதல், உள்ளிட்ட சிறுவர், இளைஞர், யுவதிகள் மற்றும் முதியோர்களுக்கான

பல விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன் போது மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியேச்சகர் பிரபாகரன் சர்வதேச சேவ் த சில்றன் அமைப்பு செயற்பாட்டு முகாமையாளர் பாமதீசன், கல்குடா வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் அருளேந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆ.தேவராசா மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு சரஸ்வதி வித்தியாலய அதிபர் சுரேந்திரகுமார் உட்பட கிராம உத்தியோகஸ்தர்கள் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

See less

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ