உடல் வலுவூட்டல் நிலையத்தின் ஆறாவது ஆண்டு விழா.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பல திட்டங்கள் எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் S.K.O விளையாட்டு கழகத்தினால் உருவாக்கப்பட்ட உடல் வலுவூட்டல் நிலையத்தின் ஆறாவது ஆண்டு விழாவினை ஒட்டி கட்டளகர் போட்டியினை ஏற்பாடு செய்து உடல் வலிவூட்டல் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களை ஊக்கப்படுத்தும் முகமாக அவர்களுக்கான சான்றிதழ்களையும் எமது கௌரவ தலைவர் சி.சந்திரகாந்தன் வழங்கியிருந்தார்.

அனேகருக்கு தெரிந்திருக்கும் S.K.O விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டளவில் எமது ஆதரவுடன் S.K.O விளையாட்டுக் கழகத்தின் உடல் வலுவூட்டல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனுடைய தொடர்ச்சியாக அங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் பலசாதனைகளைப் புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டளவில் S.K.O விளையாட்டுக் கழகத்தின் தலைமை ஆசிரியரும் எமது கௌரவ தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களும் இணைந்து எமது மாவட்ட கராத்தே மாணவர்கள் தேசிய மட்டத்தில் பல சாதனைகளை புரிய வேண்டும் என்பதற்காக விசேட கராத்தே குழாம் (pool team) ஒன்றினை உருவாக்கி அதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களை வெளிமாவட்டங்களில் இருந்து தமது சொந்த செலவில் கொண்டு வந்து தேவையான பயிற்சிகளையும் வழங்கியிருந்தனர்.

அதன் பிற்பாடு கௌரவ தலைவர் அவர்கள் சிறைச்சாலை சென்ற பின்னரும் அந்த முயற்சிகள் வீண் போகவில்லை என்பதை பறைசாற்றும் வண்ணமாக 2019 ஆம் ஆண்டு தேசிய மட்ட பாடசாலை கராத்தே விளையாட்டுப் போட்டியில் வடகிழக்கில் முதல் தடவையாக தங்கப் பதக்கத்தை மட்/ சிவானந்தா தேசிய பாடசாலையினை சேர்ந்த எஸ். வசந்தன் என்ற மாணவன் பெற்றிருந்தார். அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான பாடசாலை கராத்தே போட்டியில் மூன்றாம் இடத்தை செல்வி. அச்சுகா என்ற மாணவியும் பெற்றிருந்தார்.

இந்த வெற்றியானது வடகிழக்கில் நிகழ்த்தப்பட்ட முதலாவதும் இறுதியுமான சாதனையாக காணப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் எமது மாணவர்கள் இன்னும் பல சாதனைகளை மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நிகழ்த்துவதற்க்கு எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தன்னால் ஆன முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கும்.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ