சிவப்பு சித்திரை நினைவு தினம் 2024

சிவப்பு சித்திரை நினைவு தினம் 2024! கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் திகதியன்று அதிகாலை வேளையில் வெருகலாற்றங்கரையில் நடந்த சகோதர படுகொலையின் போது கிழக்கின் தனித்துவமான இருப்பிற்காக மடிந்த மறவர்களை நினைவு கூறும் வெருகல் படுகொலை 20வது "சிவப்பு சித்திரை" நினைவு தினம் ஏப்ரல் 10, 2024 அதாவது நேற்று புதன்கிழமை வெருகல் மலைப் பூங்காவில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகளினால் வருடா வருடம் ஒழுங்கு செய்து நாடாத்தப்படும் குறித்த நினைவு தினத்தை முன்னிட்டு வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, தாக சாந்தி மற்றும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வெருகல் மலைப் பூங்கா நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது இதன்போது தேசிய கொடி மாகாண மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து மண்ணில் மடிந்த கிழக்கின் வீர மறவர்களுக்கு அவர்களின் உறவுகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களால் மாவீர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களினால் "சிவப்பு சித்திரை நினைவு தின விசேட உரை" ஆற்றப்பட்டிருந்த நிலையில் இறுதியாக ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நினைவு நிகழ்வில் மாவீரர்களின் உறவுகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழு செயற்குழு உறுப்பினர்கள் பிரதேச கிராமிய மட்ட நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ