வால்கட்டு கிராம மயான காணிப் பிரச்சனைக்கு தீர்வு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை கிராம சேவையாளர் பிரிவில் காணப்படும் வால்கட்டு கிராமத்தில் மிக நீண்ட காலமாக மயானத்திற்கான காணி ஒதுக்கப்படாததன் காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வந்த நிலையில் தமது கிராமத்தில் இயற்கை ஏந்துகின்றவர்களை அடக்கம் செய்வதற்கான பிரத்தியேக காணியினை பெற்று தருமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் அக்கிராம மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த கிராமத்திற்கான மயான காணியானது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அக் காணியின் தற்போதைய நிலை தொடர்பிலும் இதில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் தொடர்பிலும் ஆராய்வதற்கான விசேட கள வியத்தினை  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் முன்னெடுத்திருந்தார்.

இதன் போது குறித்த காணிக்கான கிராமிய பாலத்துடன் கூடிய பிரத்தியேக வீதியை அமைத்து தருமாறு அக் கிராம மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கள விஜயத்தின் போது மண்முனை தென்மேற்கு பிரதேச குழு தலைவர் மகேந்திரன் குகநாதன், இளைஞர் அணி செயலாளர் புலக்சன், உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ