அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு!

எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அம்பாறை மாவட்ட மாநாடு நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணில் இம்மாநாடு நடைபெற்றிந்தமை சிறப்பம்சமாகும்.
இதன்போது கிராமிய குழுக்களில் இருந்து தெரிவான துறை சார் நிர்வாக பொறுப்புகளுக்கான உறுப்புரிமை பத்திரங்களை வழங்கி வைத்திருந்ததோடு, மாநாட்டு பிரகடனத்தினையும் வெளியிட்டிருந்தோம்.         
அம்பாறையில்  வாழும் எமது மக்களின்  வாக்குகளின் ஊடாக இதுவரை தெரிவான பாராளுமன்ற பிரதிநிதிகளின் செயலூக்கமற்ற  மெத்தனப்போக்கு காரணமாக  எமது மக்களின் எதிர்கால இருப்புகள்  இன்று கேள்விக்குறியாகி உள்ளன.  
குறிப்பாக எமது நிலமும் காணிகளும் தொடர்ந்தும் பறிபோகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முயற்சிகள் போன்றவற்றிலோ நாட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகளிலோ எமது மக்களுக்குரிய பங்கீடுகளை உரியமுறையில் பெற்றுக்கொள்ள முடியாத அரசியல் குரலற்றவர்களாக  அம்பாறை, திருமலை தமிழர்கள் முடங்கிக்கிடக்கின்றனர். 
எனவேதான் கிழக்கில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தலைமை கொடுக்க வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டுள்ளது.  அதன் காரணமாக எமது அடுத்த காலடிகளை கிழக்குமாகாணத்தின் சகல பகுதிகளுக்கும் எடுத்துவைக்க வேண்டிய கடமையை வரலாறு எம்மீது சுமத்தியுள்ளதாக  உணருகின்றோம். 
அந்தவகையில் கிழக்குத்தமிழர்களாக அனைவரும் ஒரே குடையின்கீழ் ஒன்றிணைந்து பயணிப்பதன் ஊடாகவே தமிழர்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் நாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என நாம் பலமாக நம்புகிறோம். இப்பயணத்தின் தொடக்கமாகவே குறித்த அம்பாறை மாவட்டத்தின் எழுச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாம் எதிர்பார்த்திருந்ததை விட இம்மாநாடு சிறப்பாக இடம்பெற்றமை எம்மை மேலும் உற்சாகமூட்டியுள்ளது.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ