மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்!

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி ஏற்பாட்டில், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடாகவும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாகவும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது, இவற்றில் உடன் தீர்க்கப்பட கூடிய பல பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எட்டப்பட்டிருந்தது.

மேலும் மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிராமிய பாலங்கள் புனரமைப்பு தொடர்பாகவும், மேலதிகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் அந்தந்த மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்களால் நிகழ்நிலை ஊடாக விளக்கமளிக்கப்பட்டு இருந்தது. அத்தோடு துறைசார் அதிகாரிகளால் மாவட்டங்களில் காணப்படும் போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துக்கோரள, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜெஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ