தாயாக கரங்கொடுப்போம் செயற்திட்டத்தினூடாக

தாயாக கரங்கொடுப்போம் செயற்திட்டத்தினூடாக பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் கல்வி நடவடிக்கைகளை தொடரும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருமலையிலும் ஆரம்பம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணியினால் கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்களுடன் இணைந்து கடந்த 5ம் மற்றும் 6ம் மாதங்களில் முன்னெடுத்த ஒருங்கிணைந்த தீர்மானத்திற்கு அமைவாக கடந்த கால யுத்தம் மற்றும் அதன் பின் எழுந்த உலகளாவிய கொவிட்தொற்று அதனுடன் இணைந்த பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணிகளால் 2024ம் ஆண்டு புதிய வகுப்பில் காலடி எடுத்து வைக்கும் தமது பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்குவதில் சவால்களை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு அவர்களின் பிள்ளை செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்கும் முகமாக அத் தாய்மார்களுடன் தாயாக நின்று கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணம் பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் குறித்த செயற்திட்டமானது முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் அம்பாறை மாவட்டத்திற்கு விஸ்தரிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் திருமலை மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளீர் அணியின் ஏற்பாட்டிலும் கட்சியின் மகளீர் அணிச்செயலாளர் சுசிகலா அருள்தாஸ் தலைமையில் மூதூர் கல்வி வலையத்திற்குட்பட்ட மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் வட்டவான் தான்தோன்றீஸ்வரர் வித்தியாலயம், பூமரத்தடிச்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம், ஈச்சிலம்பற்று சிவானந்தா ஆரம்ப பாடசாலை, போன்ற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாழைத்தோட்டம் மீனாட்சி அம்மன் வித்யாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை துறை கனிஷ்ட வித்தியாலயம், உப்பூறல் சிவசக்தி வித்தியாலயம், முத்துச்சேனை அ.த.க பாடசாலை, புண்ணையடி நாமகள் வித்தியாலயம், கல்லடி மலை நீலியம்மன் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் மற்றும் அப்பியாச கொப்பிகள் போன்றன வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும்,மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததுடன், அப் பாடசாலைகளின் வளப்பற்றாகுறைகள், தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி Z.M.M நலீம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான பூ.பிரசாந்தன், கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.தயாபரன்,உதவி கல்வி பணிப்பாளர் A.W.M ஜவாத், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு அப்பாஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆ.தேவராஜ், கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கு.நளினகாந்தன், கட்சியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் மா.ரங்கன் மூதூர் தொகுதி அமைப்பாளர் திரு சி.புவனேஷ்வரன், உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மூதூர் பிரதேசக் குழு உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ