சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விசேட களவிஜயம்

மண்முனை தென் எருவில் பற்று பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் பெண்கள் பாடசாலைக்கு சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அண்மையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் களவிஜயத்தினை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது அப்பாடசாலையின் அதிபர் P.கமலதாசன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியர்தின நிகழ்வில் பங்கேற்று ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்ததுடன் பாடசாலையின் குறைநிறைகள் தொடர்பிலும், வளப்பற்றாகுறைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடியிருந்தார்.

மேற்படி களவிஜயத்தின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரி T.ஈஸ்வரராஜா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்