4 மில்லியன் பெறுமதியான வீட்டுத்திட்ட காசோலைகள் அண்மையில் கையளிப்பு.

''சுபீட்சத்தின் நோக்கு உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வானது பரவலாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு பகுதியான 31 பயனாளிகளுக்கு 4 மில்லியன் பெறுமதியான காசோலைகளை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் தனது பிராந்திய காரியாலயத்தில் வைத்து கையளித்திருந்தார்.

குறித்த தேசிய வேலைத்திட்டத்தினூடாக மாவட்டம் பூராகவும் 192 மில்லியன் செலவில் 320 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வுவின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன், பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், தேசிய அமைப்பாளர் தம்பிராஜா தஜீவரன், மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு போன்றோருடன் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்