33 மில்லியன் ரூபா செலவில் 650m நீளமான வடிகான்.

மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரலின் கீழ் அண்மையில் வந்தாறுமுலை கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் விஜயமொன்றினை முன்னெடுத்திருந்தார்.

அதன்போது அப்பகுதி மக்கள் அப்பிரதேசத்திற்கான வடிகான் வசதிகள் இன்மை தொடர்பிலும் அதீத மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பது தொடர்பிலும் ஆதலால் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை தொடர்பிலும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் 33 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அப்பிரதேசத்திற்கான 650m நீளமான வடிகான் நிர்மான பணிகளை துரிதகதியில் ஆரம்பித்து வைத்திருந்தார்.

தற்பொழுது அப்பணிகள் முற்றுப் பெறும் தருவாயிலுள்ள நிலையில் அதற்கான களவிஜயத்தினை நேற்றையதினம் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்களென பலரும் கலந்துகொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad p

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொ