உள்ளூர் உற்பத்தியினை மேம்படுத்தும் முகமாக தானிய விதைகள் வழங்கி வைப்பு.

உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்திக் குழுவினூடாக நாடளாவிய ரீதியில் உளுந்து மற்றும் பயறு போன்ற தானிய பயிர்ச்செய்கைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் முதற்கட்டமாக உளுந்து மற்றும் பயறு போன்ற தானிய விதைகள் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தம் நமசிவாயம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், துறைசார் அதிகாரிகள், தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்கள், பயனாளிகளென பலரும் கலந்துகொண்டனர்.

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ

Video

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்