வாழைச்சேனை கண்ணகிபுர கிறவுண் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவிற்கான சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் கண்ணகிபுர கிறவுண் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அக் கழகத்தின் தலைவர் அ.மோகன்ராஜ் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சித்திரை புதுவருடத்தினை முன்னிட்ட விளையாட்டு விழாவில் தமது சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும், அதனுடன் இணைந்த இசை நிகழ்வும் நேற்றுமுன்தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளில் பங்கேற்று சாதனையாளர்களை பதக்கம் அணிவித்து கெளரவப்படுத்தியதுடன், இடம்பெற்ற இசை நிகழ்விலும் பங்கேற்றிருந்தார்.

இதன் போது நாகதம்பிரான் நாககன்னி ஆலய குருக்கள் சிவஸ்ரீ எஸ் தேவராஜா, அருட் தந்தை நோட்டன் ஜோன்சன் திருச்சபை பாதிரியார், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், கல்வி, கலை, கலாச்சார செயலாளர் சந்திரசேகரன் மணிசேகரன், செயற்குழு உறுப்பினரும் முனனாள் மாநகர சபை உறுப்பினருமான ரொணி பிரின்சன் உட்பட சாதனையாளர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்