நெடியமடு அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வுகள்.

நேற்றைய தினம் மெதடிஸ்த திருச்சபை சைனிங் ஸ்டார் திட்ட பிள்ளைகளின் ஒழுங்குபடுத்தலில் அருட்திரு.சாம்.சுபேந்திரன் அவர்களின் தலைமையில் மண்முனை மேற்க்கு வவுணதீவு பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட நெடியமடு அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய மண்டபத்தில் ஒளிவிழா நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்பதற்க்காக ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த ஒளிவிழா நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கௌரவ. பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன்போது மண்முனைமேற்கு வவுணதீவு பிரதேச சபை தவிசாளர் திரு.S.சண்முகராஜா, செங்கலடி பிரதேச சபை தவிசாளர் திரு.S.சர்வானந்தம் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்