7000 ஏக்கர் வயல் நிலங்களை பாதுக்காக்கும் முகமாக கல்லாறு முகத்துவாரத்தினை அகழ்வதற்கு நடவடிக்கை

கோட்டைக்கல்லாறு பெரிய கல்லாறு மீனவர்களினாலும் விவசாய அமைப்புக்களும் பிரதிநிதிகளாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கல்லாறு முகத்துவாரத்தினை அகழ்வு செய்து வெள்ள நீர் வடிந்தோடச் செய்வதற்கு நடவடிக்கை.

குறித்த விடயம் தொடர்பில் சம்பந்த பட்ட அதிகாரிகளுடன் குறித்த முகத்துவார பகுதிக்கான களவிஜயத்தினை முன்னெடுத்த இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் உடனடியாக குறித்த முகத்துவாரத்தினை அகழ்வு செய்யுமாறு பணித்துள்ளதுடன் இதற்கான மேலதிக செலவினங்களை தனது பிரத்தியேக நிதி ஒதுக்கீடு மூலம் பெற்றுக்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இக்கள விஜயத்தின் போது முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான கௌரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன், பிரதேசசெயலாளர் திருமதி. வில்வரெத்தினம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் வரதன், நீர்ப்பாசன திணைக்களப் பொறியியலாளர் நாகரத்தினம் உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகிகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்