கட்சியைப் பற்றி

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் சார்பில் வட்டுக்கோட்டை தீர்மானம் எனும் பெயரில் தனி தமிழ் ஈழ கோரிக்கையை ஒன்று 1976 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. இந்ததீர்மானத்தின் பின்னர் இலங்கை தமிழர்களிடத்திலிருந்து ஆயுதம் ஏந்தி பல இயக்கங்கள் உருவாகின. அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது முக்கியமான ஒன்று. இந்த இயக்கமானது 1990களின் பின்னர் மிகப்பெரிய இராணுவ பலத்தினை கொண்ட இயக்கமாக வலுவடைந்தது.

அதனை தொடர்ந்து 2004ஆம் ஆண்டின் பின்னர் இவ் இயக்கமானது தனக்குள்ளே மிகப் பெரிய பிளவை எதிர்கொள்ள நேர்ந்தது இது “கிழக்குபிளவு” என அழைக்கப்படுகின்றது. இந்த கிழக்கு பிளவில் இருந்து கிழக்கு மாகாண போராளிகளை அடிப்படையாகக் கொண்டு வன்முறைகளை கைவிட்டு ஜனநாயகப் பாதையில் பயணிப்பதற்காக ஒரு புதியகட்சி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் கட்சியானது 23.01.2008 அன்று இலங்கையில் ஒரு அரசியல் கட்சியாக தன்னை பதிவு செய்துகொண்டது. அதன் பெயரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

Main image
රූපය
TMVP