கட்சி அமைப்பு
கட்சியின் கட்டமைப்பில் 3 முக்கியமான அமைப்புக்கள் உள்ளன. அதில் ஆரம்ப கட்டமைப்பு கிராமிய கட்டமைப்பு அதற்கு மேல் செயற்குழுவும் அதற்கு மேலாக மிக முக்கியமான அதிகாரங்களைக் கொண்டதாக தலைவர் பணிக்குழுவும் காணப்படுகிறது. இதில் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு என்பன மிகப் பிரதானமான அமைப்புக்களாக உள்ளன.
இந்த தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் கட்சியின் தேசிய மாநாட்டின் ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும். இந்த கட்சியின் செயற்குழு மற்றும் தலைவர் பணிக்குழுவின் பணிகளாக கட்சியின் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது, கட்சியின் உயர்மட்ட அங்கதுவதிற்க்கான நியமனங்களை வழங்குவது மற்றும் அசாத்தியமான நிலைமைகளை கட்சி எதிர்நோக்கும் பொழுது கட்சித் தலைவரையும் மற்றும் கட்சியின் கொள்கைகளையும் பாதுகாப்பதற்கான தற் துணிவான முடிவுகளை எடுப்பது என்பன அமைகின்றன.
இதனை வேறு வழியில் கூறுவதானால் தேர்தல் காலங்களில் எவ்வாறான கூட்டணிகளை அமைப்பது மற்றும் கட்சிக் கொள்கைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை தீர்மானிப்பது அதனை விடுத்து கட்சி ஒரு மிக நெருக்கடியான இக்கட்டான நிலைமைகளை சந்திக்கின்ற பொழுது அடுத்த தலைவர், செயலாளர் போன்ற முக்கியமான பதவிகளுக்கு நபர்களை பரிந்துரைப்பது, தற்காலிக நியமனங்கள் வழங்குவது போன்ற மிக முக்கியமான செயற்பாடுகளை இந்த கட்சியின் தலைவர் குழுவும் செயற்குழுவும் முன்னெடுக்கின்றன.
இதில் தலைவர் பணிக்குழுவிற்கும் செயற்குழுவிற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் தலைவர் பணிக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்களாகவும் இருப்பார்கள் ஆனால் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தலைவர் பணிக்குழு உறுப்பினர்களாக இருக்கமாட்டார்கள். அதாவது தலைவர் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் செயற்குழு உறுப்பினராக கடமையாற்றுவார்கள். அதே நேரத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தலைவர் பணிக்குழு உறுப்பினர்களாக ஆகமாட்டார்கள்.
அதுமட்டுமன்றி சேயற்குழுவினால் எடுக்கப்படும் ஒரு தீர்மானத்தினை மாற்றுகின்ற அதிகாரம் தலைவர் குழுவிற்கு உண்டு. ஆனால் தலைவர் பணிக்குழு எடுக்கின்ற ஒரு தீர்மானத்தினை மாற்றுகின்ற அதிகாரம் கட்சியின் எந்த அமைப்புக்கும் கிடையாது.
அந்த வகை கட்சியின் முதுகெலும்பாக அதிகாரம் மிக்க அமைப்பாக கட்சியின் தலைவர் பணிக்குழு காணப்படுகின்றது.