எதிர்வரும் ஆண்டுகளில் எமது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரினால் முன்னெடுப்பதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பிலான விசேட களவிஜயம்

எதிர்வரும் ஆண்டுகளில் எமது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களினால் முன்னெடுப்பதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பிலான விசேட களவிஜயம்.

அதனடிப்படையில் எமது களவிஜயமானது பின்வரும் வேலைத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது.

01. மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நரிப்புல் தோட்டத்தினையும் இலுப்படிச்சேனையினையும் இணைப்பதற்கான பாலத்தினை நிர்மாணிப்பது.

02. ஏறாவூர்பற்று பிரதேசசெயலகப் பிரிவில் நீரோட்டத்தினால் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் மாவடியோடை பழையபாலத்திலுள்ள பாகங்களை கவனமாக கழற்றி பாதுகாப்பது / பயன்பாட்டிற்காக இன்னுமோர் இடத்திற்கு கொண்டு செல்வது.

03. கோறளைப்பற்று வடக்கு வாகரை வட்டவான் பகுதி மீனவர்கள் இலகுவாக கடலுக்குச் சென்று தமது தொழில் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கும் முகமாக அக்கிராமத்தினையும்

கடற்கரையினையும் பிரிக்கின்ற வட்டவான் ஆற்றிற்கு குறுக்கான பாலத்தினை நிர்மாணிப்பது.

04. கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆதிக்குடியினரும், விவசாயிகளும் அதிகளவில் வாழும் முறுத்தானை, மினுமினுத்தவெளி போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பயன் பெறும் முகமாக மூக்கறையான் ஆற்றுப்பாலத்தினை நிர்மாணிப்பது.

போன்ற பல வேலைத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு இக்களவிஜயம் அமைந்திருந்தது.

குறித்த இவ்விசேட களவிஜயத்தின் போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் திருமதி. குசும் சுபசிங்கே, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் திரு. குலசேகரம் சிவகுமார், பிரதம பொறியியலாளர் திரு. பொன்னையா பரதன், நிறைவேற்று பொறியியலாளர் திரு. அருமைநாயகம் லிங்கேஸ்வரன் உட்பட ஏனைய பொறியியலாளர்கள் துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்