சாதனையாளர்களை கௌரவிக்கும் வர்ண விருது நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் வர்ண விருது விழாவில் எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கௌரவ தலைவரும் கிழக்கின் முதன் முதலமைச்சரும் தற்போதைய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.
குறித்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வர்ண விருது விழா நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. கருணாகரன் அவர்கள் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதன்போது விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய பல்துறைசார்ந்த சாதனையாளர்களும் கௌரவ படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வின் போது சர்வதேச சாதனை விருதுகள், முதுநிலை தடகள சாதனை விருதுகள், தேசிய சாதனை விருதுகள், மாகாண மட்ட சாதனை விருதுகள், பயிற்றுவிப்பாளர் கெளரவ விருதுகள், விளையாட்டு உத்தியோகத்தர் கெளரவ விருதுகள், தேசிய உற்பத்தித்திறன் விருதுகள், கல்விக்கான வரலாற்றுச் சாதனை விருதுகள், அனுசரணையாளர் கெளரவ விருதுகள் என பல விருதுகள் வழங்கப்பட்டது.
குறிப்பாக 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது கட்ச்சியின் விளையாட்டுத் துறை அதிகாரிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கடற்கரை உதைபந்தாட்டத்தின் பயனாக இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தலைமை தங்கும் வாய்ப்பு மட்டக்களப்பினை சேர்ந்த ஒரு வீரனுக்கு கிடைத்தமை எமது மாவட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமே.
குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் N.M.நெளபீஸ், கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ தி.சரவணபவன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பிரதேசசெயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், பல்துறை சார்ந்த சாதனையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.