மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு
32 துவிச்சக்கர வண்டிகள், 52 தையல் இயந்திரங்கள், 28 விவசாய உபகரணங்கள், 11சிற்றுண்டிச்சாலை உபகரணங்கள் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு.
கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின்கீழ் கிராமத்துக்கான 3 மில்லியன். வட்டாரத்திற்கான 4 மில்லியன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 100 மில்லியன் வேலைத் திட்டங்களின் கீழ் வாழ்வாதார மேம்பாட்டு உதவித் திட்டங்கள் மாவட்டம் பூராகவும் எமது காட்ச்சியின் கௌரவ தலைவரும் கிழக்கின் முதன் முதலமைச்சரும் தற்போதைய இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 32 துவிச்சக்கர வண்டிகளும், 52 தையல் இயந்திரங்களும், 28 விவசாய உபகரணங்களும், 11 சிற்றுண்டிச்சாலை உபகரணங்களும் அவரது கரங்களினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.
கடந்தகால யுத்தம், இதற்க்கு முதல் அப்பகுதியினை நிர்வகித்த அரசியல் தலைவர்களின் அசண்டையீனம் போன்ற பல காரணங்களினால் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தினை வளம்பெறச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் பல வேலைத்திட்டங்களை எமது கட்சியும் அதன் கௌரவ தலைவர் சிவ சந்திரகாந்தனும் இவ்விக்கட்டான காலப்பகுதியிலும் முன்னெடுத்து வருவது அப்பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமே.