17.38 மில்லியன் ரூபா செலவில் ஊறணி நாற்சந்தி நகர அபிவிருத்தி வேலைத் திட்டம்.

17.38 மில்லியன் ரூபா செலவில் ஊறணி நாற்சந்தி நகர அபிவிருத்தி வேலைத் திட்டம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்ஷத்தின் நோக்கு 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் நகர அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சிபார்சிக்கு அமைய 17.38 மில்லியன் ரூபா செலவில் ஊறணி நாற்சந்தியில் அமைக்கப்பட்ட நகர அபிவிருத்தி வேலைத் திட்டமானது நேற்றைய தினம் மக்கள் பாவனைக்காக கௌரவ தலைவர் சந்திரகாந்தன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டு அதன் நிர்வகிப்பு மற்றும் பராமரிப்பிற்க்காக மட்டக்களப்பு மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நகர அபிவிருத்தி வேலைத்திட்டமானது குறிப்பாக மின்குமிழ் வசதிகளுடன் கூடிய நடைபாதை மற்றும் பூங்கா போன்றவற்றினை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வுகளில் போது மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ தியாகராஜா சரவணபவன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரம் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கௌரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் கௌரவ மாநகரசபை உறுப்பினர்கள் போன்ற அரசியல் பிரமுகர்களும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் திரு. லியனகே, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிகாந், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. வாசுதேவன் போன்ற துறைசார் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்