பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் நெடியமடு வைத்தியசாலைக்கு களவிஜயம்

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நெடியமடு வைத்தியசாலையானது உரிய பராமரிப்புக்கள் இன்மை காரணமாகவும் உத்தியோகத்தர்களின் கவனக் குறைவு காரணமாகவும் மிக மோசமான நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துவந்தனர். வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உண்ணிச்சை, ஆயித்தியமலை, பாவற்கொடிச்சேனை, ஒளிமடு, இராசதுரைநகர், 8ம் மைல்கள், இருநூறுவில், காந்தி நகர் உள்ளிட்ட பல கிராமங்களால் பயன்படுத்தப்படும் இவ் வைத்தியசாலையானது மிக மோசமான நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அடிக்கடி யானைத் தாக்குதல் இடம்பெறும் பகுதியில் வைத்தியசாலை அமைந்து காணப்படுவதன் காரணமாகவும் யானை வேலிகளின் பாவனைக்காலம் முடிவடைந்து காணப்படுகின்றமையாலும் இவ்வேலிகளை சுலபமாக யானைகள் உடைத்து வைத்தியசாலை வளாகத்தினுள் புகுந்து தாக்குதகளை மேற்கொண்டு வருவதாகவும் ஊர்வாசிகள் தெரிவித்திருந்தனர். இதற்கமைய கடந்த வருடம் யானையினால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட வைத்தியசாலையில் பெயர்ப்பலகையினை கூட ஒருவருட காலமாகியும் உரிய அதிகாரிகள் சரி செய்யப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனவர்களின் பணிப்புரைக்கமைய கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் குறித்த இடத்திற்கு களவிஜயத்தினை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்ததுடன் உரிய அதிகாரிகளுடன் அவ்விடையம் தொடர்பில் கலந்துரையாடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்