சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபடவுள்ள இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான காணிகளையும் வழங்குவதற்கு நாம் தயார்

சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபடவுள்ள இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான காணிகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதற்கு நாம் தயார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிப்பு.

இரசாயனங்கள் அற்ற இயற்கை சேதனபசளைகளை பயன்படுத்துவதன் மூலம் நோயற்ற வளமான எதிர்கால சந்ததியை கட்டியெழுப்பும் நோக்குடன் பல்வேறு திட்டங்கள் எமது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய 29/06/2021 அன்று கோறளைப்பற்று தெற்கு(கிரான்) பிரதேச செயலகத்திலும் அதேபோன்று 28/06/2021 அன்று மண்முனை மேற்கு(வவுணதீவு) பிரதேச செயலகத்திலும் இதுதொடர்பான விரிவான கூட்டங்களை அவர் மேற்கொண்டிருந்தார்.

இதில் குறிப்பாக மாவட்டத்துக்கு தேவையான அளவு சேதனப் பசளைகளை எவ்வாறு உற்பத்தி செய்வது, சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபடும் மற்றும் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகளை ஒழுங்கு செய்து வழங்குவது போன்ற தீர்மானங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்மூலம் தொழில் முயற்சியாளர்களையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவது மட்டுமன்றி நோயற்ற வளமான எதிர்கால சந்ததியையும் உருவாக்க முடியும் என்றும் கௌரவ சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இக் கூட்டங்களின் போது மேலதிக அரசாங்க அதிபர், அந்தந்த பிரதேச செயலகங்களை சேர்ந்த பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பல்கலைக்கழக போதனாசிரியர்கள் , துறை சார் நிபுணர்கள், விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்