5000 கொரோனா தடுப்பூசிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக விரைவில்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொவிட் நிலவரம் தொடர்பாக ஆராயும்  விசேட கலந்துரையாடல் இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவின் மூன்றாவது அலையின் பின்னர் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுவதனைத் தொடர்ந்து மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில்  விசேட கலந்துரையாடலொன்று இன்று 27.05.2021 ஆந் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொவிட் நிலவரம் தொடர்பாக ஆராயும்  விசேட கலந்துரையாடலின்போது, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நோயாளர்களுக்கான இடப்பற்றாக்குறை மற்றும் இக் காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தெடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் கொவிட் நிலையினை கட்டுப்படுத்துவது மற்றும் மாவட்டத்தில் உள்ள மக்களிற்கான நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும், மக்களுக்கு பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக பல்வேறுபட்ட ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்.

இதனடிப்படையில் உடனடியாக 5000 தடுப்பூசிகளை மாவட்டத்திற்குள்  கொண்டுவருவதற்கான தீர்மானத்தினை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டதுடன்  சுகாதார அமைச்சுக்கும்  உடனடியாக அறிவித்துள்ளார். இதன் பொருட்டு மிக விரைவில் அரச நிருவாக உத்தியோகஸ்தர்களுக்கும் உள்ளுராட்சி மன்றங்களின் துப்பரவு பணியாளர்களுக்கும் கோவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி), மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்