மகிழவெட்டுவான் கோதாரிச்சேனை கிராமத்துக்கான குடிநீர் இணைப்பு திட்டம் ஆரம்பித்து வைப்பு!

மகிழவெட்டுவான் கோதாரிச்சேனை கிராமத்துக்கான குடிநீர் இணைப்பு திட்டம் ஆரம்பித்து வைப்பு!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோதாரிச்சேனை கிராமத்திற்கான குடிநீர் இணைப்பு திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சினை இணைப்பு வழங்கப்படாததன் காரணமாக அப்பிரதேச மக்கள் மிக நீண்ட காலமாக பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்திருந்தனர். எனவே தமது கிராமத்திற்கான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருமாறு இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மேற்படி பிரதான குடிநீர் இணைப்பானது இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் யோகராசா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபை முகாமையாளர், கட்சியின் பிரதேச குழு தலைவர் கோபிநாதன், செயலாளர் நித்தீஸ்வரன், உட்பட கிராம மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்