காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன வேலைத்திட்டத்தினை விரைவு படுத்துவது தொடர்பான கள விஜயம்
200 மில்லியன் செலவில் மட்டக்களப்பில் உள்ள பிரதான குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் புனரமைப்பு.
காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன வேலைத்திட்டத்தின் கீழ் (CSLAP) உலக வங்கியின் நிதியுதவி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய நீர்ப்பாசன மேம்பாட்டு பணிகள் தொடர்பான கள விஜயத்தினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அண்மையில் முன்னெடுத்திருந்தார்.
இதன்போது சுமார் 200 மில்லியன் செலவில் நீர்ப்பாசன மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் புலுட்டுமானோடை குளம், இரைச்சகல் குளம் வெப்பத்தாவெளி குளம் குறுக்கனாமடு அணைக்கட்டு போன்றவற்றுக்கான நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு குறித்த பணிகளை முடிவுறுத்துவதற்கு தடையாக இருந்த பிணக்குகளை நிவர்த்தி செய்திருந்ததோடு புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி முடிவுறுத்துவதற்கான பணிப்புரைகளையும் வழங்கியிருந்தார்.