08 மில்லியன் செலவில் செப்பனிடப்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய தேரோடும் வீதி!
26.04.2024
08 மில்லியன் செலவில் செப்பனிடப்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய தேரோடும் வீதி!
பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 08 மில்லியன் செலவில் குறித்து தேரோடும் வீதியானது செப்பனிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய தேரோடும் வீதியில் இவ்வருட தேரோட்டமானது மிக விமர்சையாக நடைபெற்றது.