கண்ணகிபுரம் கிறவுண் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா-2024!

மட்டக்களப்பு வாழைச்சேனை கண்ணகிபுரம் கிறவுண் விளையாட்டுக் கழகத்தின் 37வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், பிறந்திருக்கின்ற சித்திரை புது வருடத்தை முன்னிட்டும் சாதனையாளர் கௌரவிப்பு விழாவும் இசை நடன கலை விழாவும் அக் கழகத்தின் தலைவர் திரு.அ.மோகனராஜ் தலைமையில் கருணைபுரம் குழந்தையேசு விளையாட்டு மைதானத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்வி, விளையாட்டு மற்றும் நடனத்துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தோடு சின்னஞ்சிறு சிறார்களின் இசை நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருந்தது.

இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனையாளர்களை கௌரவித்திருந்தார்.

அந்த வகையில் புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களும், க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி அடைந்த மாணவர்களும், 2023ம் வருடம் க.பொ.த உயர்தரத்தில் சித்தி அடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும், சர்வதேச சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களும், நடனத்துறையில் சாதனை படைத்த மாணவர்களும் வெற்றிக் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந் நிகழ்வில் கண்ணகிபுரம் நாகதம்பிரான் நாககன்னி ஆலய குருக்கள் சிவஸ்ரீ.எஸ் தேவராஜா, கோறளைப்பற்று வாழைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர்

A.ஜெயகுமணன், கோரகல்லிமடு ஸ்ரீ ரமணமகரிஷி வித்யாலயா அதிபர் சி.இளங்கோவன், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் இனோஜன், கண்ணகிபுரம் கிராம உத்தியோகத்தர் ஜெ.லோபனராஜ், இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கா.சுந்தரலிங்கம், A.N.K ஷாலினி சீபுட் சென்டர் உரிமையாளர் அ.பன்னீர்செல்வம், உட்பட கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

அந்த வகையில் புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களும், க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி அடைந்த மாணவர்களும், 2023ம் வருடம் க.பொ.த உயர்தரத்தில் சித்தி அடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும், சர்வதேச சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களும், நடனத்துறையில் சாதனை படைத்த மாணவர்களும் வெற்றிக் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந் நிகழ்வில் கண்ணகிபுரம் நாகதம்பிரான் நாககன்னி ஆலய குருக்கள் சிவஸ்ரீ.எஸ் தேவராஜா, கோறளைப்பற்று வாழைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர்

A.ஜெயகுமணன், கோரகல்லிமடு ஸ்ரீ ரமணமகரிஷி வித்யாலயா அதிபர் சி.இளங்கோவன், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் இனோஜன், கண்ணகிபுரம் கிராம உத்தியோகத்தர் ஜெ.லோபனராஜ், இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கா.சுந்தரலிங்கம், A.N.K ஷாலினி சீபுட் சென்டர் உரிமையாளர் அ.பன்னீர்செல்வம், உட்பட கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்