தலா 4000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள்

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக கிழக்கு மாகாணம் உட்பட பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது, இதனால் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நாசீவந்தீவு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 475 குடும்பங்களுக்கு 2மில்லியன் செலவில் ஒரு குடும்பத்திற்கு தலா 4000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் பெரெண்டினா அபிவிருத்தி சேவை நிறுவனத்தினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைவாக பெரெண்டினா நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் பதுர்தீன் மொஹமட் ரஹீம், மாவட்ட இணைப்பாளர் எஸ்.தினேஸ் ஆகியோர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி. திருச்செல்வம், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரத்தியேக செயலாளரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜீவரன், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்