கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக கட்டட தொகுதி திறந்து வைப்பு
கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக கட்டட தொகுதியானது மட்டக்களப்பில் கெளரவ போக்வரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி கௌரவ பந்துல குணவர்த்தன, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ. சிவ. சந்திரகாந்தன், ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரால் இன்றைய தினம் (06) திறந்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய நடனம் இசை முழங்க அதிதிகள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வு இடம் பெற்றது.
அஞ்சல் திணைக்களத்தின் 448 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த அஞ்சல் நிர்வாகத் கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி எம்.எச்எம். அஸ்லம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதான், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, அஞ்சல் மா அதிபதி ருவன் சத்துமார மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.