பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கல்வி பயின்று புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் தலைமையில் வருடா வருடம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவ் வருடமும் பாடசாலையின் அதிபர் K.கதிர்காம நாதன் தலைமையில் பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் சந்திரகாந்தன் வித்தியாலயத்தை சேர்ந்த 12 மாணவர்களுக்கும், வட்டவான் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கும், விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்குமாக மொத்தமாக 16 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

அதனுடன் இணைந்ததாக குறித்த மாணவர்களை கற்பித்து சிறந்த முறையில் வழிநடத்திய ஆசிரியர்களையும் கௌரவித்து பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கல்குடா கல்வி வலயக் கல்வி அதிகாரிகள், பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்