கல்குடா வலயத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையிலும் பாடசாலைக் கல்வியினை தொடரும் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புரையின் பெயரில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ பூபாலபிள்ளை பிரசாந்தனால் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் கல்குடா வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வுகளின் முதற்கட்டமாக மட்/ககு/கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி மற்றும் மட்/வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலயம் போன்றவற்றிற்கு நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த புத்தகப்பைகளானது கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக சீன அரசாங்கத்தினால் சீன இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கோடு வழங்கப்பட்டிருந்த நிலையில் அதன் ஒரு தொகுதி இராஜாங்க அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கென மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

அதன் படி குறித்த புத்தக பைகள் வழங்கும் நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜெயவதனன், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித், மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்