முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் (Blue Star) கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்டசுற்றுப் போட்டி

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் (Blue Star) விளையாட்டு கழகத்தினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் மின்னொளியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் விளையாட்டு கழகமானது பழமை வாய்ந்த ஓர் விளையாட்டு கழமாக இருந்த போதிலும் பல தசாப்த காலமாக தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றினையே விளையாட்டு மைதானமாக பயன்படுத்திவந்தது. அதற்கிணங்க இராஜாங்க அமைச்சர் கௌரவ சந்திரகாந்தன் அவர்களின் முயற்சியால் குறித்த தனியார் காணி உரிமையாளருக்கு பதில் காணிகள் வழங்கப்பட்டு அக் காணியானது வுளுஸ்டார் விளையாட்டு கழகத்தின் தொடர்ச்சியான பாவனைக்காக சட்டரீதியாக கையளிக்கப்பட்டது. எனினும் குறித்த காணி மாத்திரம் இம் மைதானத்திற்கு போதாது என்ற காரணத்தினால் அருகாமையிலுள்ள அரச காணியினையும் இணைத்து முழுமையான மைதானமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து உத்தியோ பூர்வ நடவடிக்கைகளையும் கௌரவ தலைவர் முன்னெடுத்துள்ளார்.

குறித்த நிகழ்வின் போது கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் திரு. S.நவநீதன், சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு .M.சுதர்ஷன் மற்றும் கழக வீரர்கள் ,கிராமிய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ,மாதர் கிராமிய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபையினர் போன்றோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்