29 பயனாளிகளுக்கு தலா 250, 000/= பெறுமதியான காசோலைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 29 பயனாளிகளுக்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சிவ சந்திரகாந்தன் அவர்களினால் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணத்திற்குரிய கரையோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் மற்றும் கண்காணிப்பு பிரிவின் ஊடாக தலா 250, 000 பெறுமதியான காசோலைகள் இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.
மாவட்டத்தில் காணப்படுகின்ற முக்கிய வளங்களில் ஒன்றான வாவிகளில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு சார்ந்த உணவு உற்பத்தி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்றவற்றிற்க்காகவே குறித்த காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்க உத்தியோகத்தர் திரு. நெல்சன் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.