7.29 மில்லியன் ரூபா செலவில் முறுத்தானை அக்குரானை வீதி செப்பனிடப்பட்டது.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஆதிக்குடிகள் வாழும் பழம்பெரும் கிராமங்களான முறுத்தானை மற்றும் அக்குரானை போன்ற கிராமங்களை இணைப்புச் செய்யும் பிரதான வீதியானது எமது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களினால் 7.29 மில்லியன் ரூபா செலவில் செப்பனிடப்பட்டுள்ளது.

அப் பிரதேசத்தினையும், அப் பிரதேச மக்களையும், அவர்கள் கஸ்டங்களையும் நன்கு அறிந்தவர் என்ற வகையில் அம்மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் முகமாக தன்னாலான பணிகளை உளசுத்தியுடன் முன்னெடுத்துவருகின்றார். அந்தவகையில் குறித்த முறுத்தானை அக்குரானை வீதியானது கடந்த காலங்களில் பள்ளம் படுகுழியாக சீரற்ற நிலையில் காணப்பட்டதனால் பொதுமக்களும் அவர்களுக்கு பணியாற்ற செல்லும் அரச உத்தியோகஸ்தர்களும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

அதற்கிணங்க குறித்த பகுதி மக்கள் தமது அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகளை சரிவர முன்னெடுக்கும் முகமாகவும், தமது உற்பத்திகளை சரிவர சந்தைப்படுத்தும் முகமாகவும் அப்பகுதிமக்களுக்கு பணியாற்ற செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் தாமதங்கள் இன்றி கடமைகளுக்கு செல்லும் முகமாகவும், குறித்த பாதை செப்பனிடப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்ததாக இவ் எல்லை புற கிராமங்களை இணைப்புச்செய்யும் அக்குரானை பாலத்தினையும் மிகவிரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எமது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

குறித்த பாதையின் இரு மருங்கிலும் பற்றைக் காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் யானைகள் மறைந்திருந்து மனிதர்களை தாக்கிய பல சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தது. அவ்வாறான பிரச்சனைகளும் இனி வரும் காலங்களில் குறைவடையுமென நம்புகின்றோம்.

குறித்த நிகழ்வின் போது பிரதேசசபை உறுப்பினர் கௌரவ கிருபாகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் திரு. பரதன், கோறளை பற்று தெற்கு பிரதேச செயலாளர் ராஜ்பாவு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜா உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர், கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகஸ்தர் மற்றும் துறைசார் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்