23. 48 மில்லியன் ரூபா செலவில் வாகரை கண்டலடி துறைமுகவீதி கிராமியப்பாலம்.

23. 48 மில்லியன் ரூபா செலவில் வாகரை கண்டலடி துறைமுகவீதி கிராமியப்பால வேலைகளின் ஆரம்பமும். அதனுடன் இணைந்ததாக மிக விரைவில் அமைக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் திகிலிவெட்டை பாலத்திற்க்கான கள விஜயமும்.

உள்ளூர் உற்பத்தி மற்றும் வேளாண்மை தன்னிறைவு போன்றவற்றிற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய வீதிகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி முடிந்தவரை விரைவாக செய்துகொடுப்பதற்கான முயற்சிகள் பல கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வளங்கள் தொடர்பிலும் மற்றும் அவற்றை வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு பாரிய சவால்களாகவுள்ள சீரற்ற பாதை அமைப்புக்கள் மற்றும் அதனுடன் இணைந்த பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் முகமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிலிருந்து வரவழைக்கப்பட்ட அமைச்சின் செயலாளர் R. W. R. பிறேமஸ்ரீ மற்றும் அவருடன் இணைந்த குளாமினருடன் மிக விரைவில் அமைக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் திகிலிவெட்டை பாலத்திற்கான கள விஜயத்தினை இராஜாங்க அமைச்சர் கௌரவ. சிவ. சந்திரகாந்தன் முன்னெடுத்திருந்தார்.

அதனுடன் இணைந்ததாக கோறளைப்பற்று வடக்கு வாகரை கண்டலடி கிராமிய பாலத்திற்க்கான அடிக்கல்லினையும் நட்டு வைத்திருந்தார். அனைவருக்கும் தெரிந்திருக்கும் வாகரை கண்டலடி பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதாரமாக திகழும் மீன்பிடி தொழில் நடவடிக்கைகளுக்காக கடற்கரைக்கு செல்லும் பிரதான வீதியாக துறைமுக வீதி அமையப்பெற்றுள்ளது. அவ்வீதியில் அமைந்துள்ள கிராமியப் பாலம் மிக மோசமான நிலையில் சிதைவடைந்து காணப்படுவது தொடர்பில் எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து 23. 48 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அடிக்கல் நடும் நிகழ்வுகளின் போது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் R. W. R பிறேம ஸ்ரீ, எமது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் B. ரணவீர மற்றும் அவர்களுடன் இணைந்து அமைச்சு அலுவலகத்திலிருந்து வருகைதந்த முக்கிய அதிகாரிகள் உட்பட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிவகுமார், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பரதன், நிறைவேற்றுப் பொறியியலாளர் லிங்கேஸ்வரன் போன்றோருடன் துறைசார் அதிகாரிகள் பொதுமக்களென பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்