கோறளைப்பற்று ''கோப் றெஸ்ட்'' கட்டிடத் தொகுதியானது சங்கத்தின் நன்மைகருதி மீள்புனரத்தானம் செய்து இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது
கோறளைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வருமானத்தினை மேம்படுத்தும் முகமாக 2013 ஆம் ஆண்டளவில் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய இராஜாங்க அமைச்சருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் நிதிஒதுக்கீட்டின் கீழ் உருவாக்கப்பட்ட ''கோப் றெஸ்ட்'' கட்டிடத் தொகுதியானது ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்திலேயே தனியாரிடம் சங்கத்தின் குத்தகை வருமானத்திற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டளவில் சங்கத்தின் வருமானமட்டத்தினை அதிகரிக்கும் முகமாக அக்கட்டிட தொகுதியினை சங்கமே மீளப் பொறுப்பேற்றிருந்தது. ஆனபோதிலும் அதில் பல குறைபாடுகளும் திருத்த வேலைகளும் காணப்பட்டதனால் மீள்புனரத்தானம் செய்யப்பட்டு இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. இக்கட்டிட தொகுதியானது தங்குமிடவசதிகளுடன் கூடியதாக சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் அமையப்பெற்றுள்ளது. இதன்மூலம் குறித்த கட்டிடத்தினை பயன்படுத்தி கூட்டுறவுச் சங்கமானது நேரடியாக தனது வருமானத்தினை உழைக்க முடிவதுடன் அதில் காணப்படுகின்ற ஒரு சில குறைபாடுகளையும் எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய இராஜாங்க அமைச்சருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த நிகழ்வுகளின்போது கூட்டுறவுச் சங்கங்களுக்கான கிழக்கு மாகாண ஆணையாளர் சிவலிங்கம் மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. திருச்செல்வம் கூட்டுறவு சங்கங்களுக்கான மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் தங்கவேல் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. ஷோபா ஜெயரஞ்சித் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ