செம்பித்துறை வடிசல் வாய்க்கால் மற்றும் பம்மாந்துறை பிரதான விவசாய பாதை போன்றன செப்பனிடும் நடவடிக்கைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விசேட களவிஜயம்
சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்துறை வடிசல் வாய்க்கால் மற்றும் பம்மாந்துறை பிரதான விவசாய பாதை போன்றன செப்பனிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்.
பொன் விளையும் பூமியாக திகழும் பாரம்பரிய விவசாயக் கிராமங்களான சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்துறை வடிசல் வாய்க்காலானது மிகநீண்ட காலமாக துப்புரவு செய்யப்படாமை தொடர்பிலும், பம்மாந்துறை பிரதான விவசாய பாதையானது மிக நீண்ட காலமாக செப்பனிடப்படாத காரணத்தாலும் போக்குவரத்தில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக ஏறக்குறைய 250 ஏக்கருக்கும் அதிகமான விவசாயக்காணிகள் சீராக செய்கைபண்ணுப்படாது காணப்பட்டமை குறித்தும் விவசாய பிரதிநிதிகள் எறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான கௌரவ. நவரெத்தினம் திருநாவுக்கரசு அவர்களிடம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக குறித்த விடயங்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ. சிவ சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த விடயங்ள் தொடர்பில் அதிகூடிய கவனங்களைச் செலுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு இராஜாங்க அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த வடிசல் வாய்க்காலிற்க்கான துப்புரவுப் பணிகளும் வீதி செப்பனிடும் பணிகளும் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்
குறித்த வேலைகள் தொடர்பிலான விசேட களவிஜயத்தினை இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்றையதினம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்விஜயத்தின் போது விவசாயப்பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் இராஜாங்க அமைச்சருக்கு தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
குறித்த களவிஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. நாகரெட்ணம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் உறுகாமப் பிரிவுப்பொறியியலாளர் திரு. விஷ்ணுரூபன் உட்பட துறைசார் அதிகாரிகள் விவசாயிகளென பலரும் கலந்துகொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ