பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்
பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்ற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளீர் அணி ஆதரவு.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் கடந்த 15.09.2022 அன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வின்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்தினம் குறித்து மிக மோசமான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தியிருந்தார்.
ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டிருப்பின் அது தொடர்பில் நாகரீகமான முறையில் விமர்சிப்பதற்கும் கேள்விகளை தொடுப்பதற்க்கும் அனைவருக்கும் பூரண சுதந்திரம் உண்டு. ஆனால் அவர் ஒரு பெண்மணி என்பதனையும் இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் என்பதனையும் மனதிற்கொள்ளாது மிகக் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களால் விமர்சித்திருந்தமை ஒட்டுமொத்த பெண்கள் சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை கண்டித்தும் இனி வரும் காலங்களில் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகள் இடம்பெறககூடாது என்பதனையும் வலியுறுத்தி இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் ஒன்றியம் இணைந்து இக்கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்நெடுதிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி செயலாளர் சசிகலா அருள்தாஸ் தலைமையிலான குழுவினர் ஆதரவு வழங்கியிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ