கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கான நேரடி கள விஜயம்..

கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கான நேரடி கள விஜயமும், மக்களுடனான சந்திப்பும். கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் "மக்களுடன் நாம்" செயற்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றிருந்தது. குறித்த சந்திப்பின் போது கதிரவெளி, புச்சாக்கேணி, பால்சேனை, அம்மன்தனாவெளி, காயாங்கேணி போன்ற பிரதேசங்களுக்கு நேரடி கள விஜயத்தினை மேற்கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிராமத்தின் குறை நிறைகள் தொடர்பாகவும், மக்களின் தேவைகள் தொடர்பாகவும் நேரடியாக கேட்டறிந்து கொண்டார். அத்துடன் அதற்கான தீர்வினை முடிந்தவரை மிக விரைவாக பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார். மேலும் 25 பேர் கொண்ட மகளிர் அணியையும், காயாங்கேணி பிரதேசத்தில் கிராமிய குழுவையும் புதிதாக தெரிவுசெய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கெளரவ நாகலிங்கம் திரவியம் அவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள், கோறளைப் பற்று தவிசாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ