வாகரை பிரதேச செயலகப் பிரிவில் 04 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள குளங்கள்

04 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பனிச்சங்கேணி தாமரைக்குளம், திக்கானாகுளம், மாணிக்க குளம். கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கமைய கொக்ககோலா நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் We Effect நிறுவனத்தின் அனுசரணையுடனும் சுமார் 04 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பனிச்சங்கேணி தாமரைக்குளம், திக்கானாகுளம், மாணிக்க குளம் போன்றவற்றிற்கான ஆரம்ப வேலைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைத்திருந்தார். குறித்த திட்டமானது குளத்தை சூழவுள்ள சுமார் 1000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்துவதாகவும் ,பெண்களுக்கான வாழ்வாதார வலுவாக்கத்தை அதிகரிப்பதாகவும், அப்பிரதேசத்தின் விவசாயத்திற்கு தேவையான நீர்பாசனத்தினை வழங்குவதாகவும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான ம.கருணாகரன் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜீ.அருணன் ,உலகமயமாதல் பிராந்திய பணிப்பாளர் நினா லரே ,கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் ஏ .எல் எம் அஸ்மி ,கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு பிரதி ஆணையாளர் கே.ஜெகநாத் மற்றும் துறைசார் அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ