வாகரை பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள பாரியளவிலான மீன் வளர்ப்பு திட்டம்
கோறளைப்பற்று வடக்கு வாகரை பச்சைவெட்டை பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள பாரியளவிலான மீன் வளர்ப்பு திட்டம்.
மாவட்டத்திலுள்ள வளங்களை பயன்படுத்தி உள்ளூர் உற்பத்தியினை அதிகரித்தல் அதனூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த என்கின்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் உயரிய சிந்தனைக்கு அமைவாக கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பச்சைவெட்டைப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற பாரியளவிலான திலாப்பியா மீன் வளர்ப்பு திட்டம்.
குறித்த திட்டத்தினுள் 80 பயனாளிகள் உள்வாங்கப்பட்டு ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 1/2 ஏக்கர் அளவிலான திலாப்பியா மீன்வளர்ப்பிற்க்கான குளங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இத் திட்டத்தினுள் உள்வாங்கப்படவுள்ள பயனாளிகளுக்கான நேர்முக தேர்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத் திட்டகத்திற்கான ஆரம்ப வேலைகள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் 80 லட்சம் ரூபா நிதிப்பங்களிப்புடன் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வேலைகளின் முன்னேற்றம் தொடர்பிலான நேரடி களவிஜயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. சந்திரகாந்தன் அவர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்டிருந்தார்.
குறித்த களவிஜயத்தின் போது கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் திரு. அருணன் , கோறளைப்பற்று வடக்கு வாகரை உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுதாகரன், மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கம் உத்தியோகஸ்தர் திரு. நெல்சன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதி தலைவர் கௌரவ. நாகலிங்கம் திரவியம், கோறளைப்பற்று வடக்கு வாகரை தவிசாளர் கௌரவ. கண்ணப்பன் கணேசன் உட்பட ஏனைய துறைசார் அதிகாரிகள், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ