100, 000 அரச நியமனம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 124 பேருக்கான நியமனம்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்ஷத்தின் நோக்கு வறுமை ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் வருமானம் குறைந்த ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் 124 பேருக்கான பயிலுனர் நியமனங்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்படவுள்ளது.