340 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் 12 km நீளமான வீதி.
340 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் காந்திநகர் தொடக்கம் பன்சேனை மற்றும் தாந்தாமலை வரையிலான 12 km நீளமான வீதி.
கிராமிய உட்கட்டுமானங்களை விருத்தி செய்யும் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பயணத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் 340 மில்லியன் ரூபா செலவிலான மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காந்தி நகர் கிராமத்திலிருந்து பன்சேனை மற்றும் தாந்தாமலை வரை செல்லும் 12km நீளமான வீதிக்கான ஆரம்ப வேலைகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தொடக்கி வைத்திருந்தார்.
அப்பிரதேச மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வந்த குறித்த வீதீயினூடாக அப்பிரதேச மக்கள் தங்களது உற்பத்திகளை தங்குதடையின்றி சந்தைப்படுத்த முடிவதுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் தமது கல்வி நடவடிக்கைகளை திறன்பட முன்னெடுக்க முடியும்.
குறித்த நிகழ்வுகளின் போது எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ. பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திரு. சுதாகர் உட்பட துறைசார் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ