68. 29 மில்லியன் ரூபா செலவில் 2. 69 கிலோ மீட்டர் நீளமான சுங்கான்கேணி கிராம வீதிக்கான ஆரம்ப வேலைகள்.

68. 29 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் 2. 69 கிலோ மீட்டர் நீளமான கோறளைப்பற்று சுங்கான்கேணி கிராம வீதிக்கான ஆரம்ப வேலைகள். தமிழ் மக்கள் விடுதலை புயலிகள் கட்சியின் கிராமிய உட்கட்டுமானங்களை விருத்தி செய்யும் பயணத்தின் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்களின் சிபாரிசில் 68.29 மில்லியன் ரூபா செலவில் கோறளைப்பற்று சுங்கான்கேணி பிரதேசத்தில் அமைக்கப்படும் மாயனவீதியுடன் இணைந்த 2. 69 கிலோமீட்டர் வீதிக்கான ஆரம்ப வேலைகளை இன்றைய தினம் கௌரவ தலைவர சந்திரகாந்தனவர்கள் ஆரம்பித்து வைத்திருந்தார். குறித்த நிகழ்வுகளின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ. ஷோபா ரஞ்சித் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ

Video

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்