தேற்றாத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள உப்பு வட்டி குளத்தின் அணைக்கட்டு நிர்மானம்.
நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள்/ அணைக்கட்டுகளைஅபிவிருத்திசெய்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு தேற்றாத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள உப்பு வட்டி குளம் அமைப்பதற்கான வேலைகளை எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று ஆரம்பித்து வைத்தார்.
இதன் மூலம் நீர்பாசனத்தினை அதிகரித்து விவசாயத்தினை கட்டி எழுப்புதல் விளைச்சலை அதிகரித்தல்போன்ற பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவபிரியா வில்வரத்தினம்நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் எம். நவரத்தினம் மற்றும் தென்எருவில் பற்று ஒருங்கிணைப்பு குழு உபதலைவர் திரு.சந்திரகுமார் உட்பட அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமைகுறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ
சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்