8.1 மில்லியன்ரூபா செலவில் கடைத்தொகுதி மற்றும் 9. 8 மில்லியன் ரூபா செலவில் பலநோக்கு கட்டிடத்தொகுதி.

8.1 மில்லியன்ரூபா செலவில் கடைத்தொகுதி மற்றும் 9. 8 மில்லியன் ரூபா செலவில் பலநோக்கு கட்டிடத்தொகுதி. கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் முகமாகவும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்க செய்து அதன் மூலமாக பிரதேசசபை செயற்பாடுகளை சுமுகமாக முன்னெடுக்கும் முகமாகவும் 8.1 மில்லியன் ரூபா செலவில் காயங்கேணி பகுதியில் கடைத்தொகுதி ஒன்றினையும் 9. 8 மில்லியன் ரூபா செலவில் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக பலநோக்கு கட்டிடத் தொகுதி ஒன்றினையும் அமைப்பதற்கான வேலைகளை நேற்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். குறித்த கடைத்தொகுதி மற்றும் பலநோக்கு கட்டிடத்தொகுதி மூலமாக அப்பகுதியில் உள்ள இளம் முயற்சியாளர்கள் , முதலீட்டாளர்கள் தமது வணிக மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிவதுடன் அதன் மூலமாக அப்பகுதி மக்களுக்கான ஒரு சில தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கிக்கொடுக்க முடியும். குறித்த நிகழ்வுகளின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கோறளைப்பற்று வடக்கு வாகரை தவிசாளர் கௌரவ கண்ணப்பன் கணேஷன், ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் கௌரவ அருந்திருநாவுக்கரசு, துறை சார் அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ