உன்னிச்சைகிராம மீனவர் சங்கத்திற்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள்.

 

உன்னிச்சைகிராம மீனவர் சங்கத்திற்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள். உள்ளூர் உற்பத்தி மற்றும் சுய பொருளாதாரம் போன்றவற்றை மேம்படுத்தும் முகமாக பல வேலைத்திட்டங்களை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 28/10/2021 அன்று உன்னிச்சைகிராம மீனவர் சங்கத்தின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக 5 மில்லியன் ரூபா பெறுமதியான பல்தொகுதி கட்டிடம் ஒன்றினை திறந்து வைத்ததுடன் அதனுடன் இணைந்ததாக இறால் மற்றும் மீன் உற்பத்தியினை மேம்படுத்தும் முகமாக 60,000 மீன்குஞ்சிகளையும், 50,000 இறால் குஞ்சுகளையும் குறித்த உன்னிச்சைக் குளத்தில் விட்டிருந்தார். குறித்த நிகழ்வுகளின்போது பிரதேச செயலாளர் சுதாகர் மற்றும் மாவட்ட நீரியல் வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகஸ்தர் ஜெயகப் நெல்சன் ஆகியோர் உட்பட துறைசார் அதிகாரிகள் மற்றும் மீனவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ